Tuesday, February 22, 2011

காலம்...
உன்னிலும் என்னிலும் 
கரைந்துகொண்டிருக்கிறது...

நமக்கான காலம்..
விரயமாகிகொண்டிருக்கிறது....
மறப்பதற்க்காகவே
                        நினைக்கப்படுபவை...
மறப்பதில்லை
                       நம் மனதை விட்டு...
உன் எல்லைகளைத் தாண்டி
உள்ளே வா...
உனக்கான கூண்டல்ல நான்..
உனக்கேவான வானத்தின் கதவு...
கவிதை நீ...
தன்
வெள்ளை மனதில்
எனை 
பதிக்க மறுக்கும் 
ஆர்ப்பாட்டக் கவிதை...

உனதிந்த பிரிவு...
இன்னொரு தாயின் 
இழப்பின் சமன் எனக்கு.

உன் மடிதந்து அழ வை..
.
இந்த ஜென்மத்தின் வலி 
என் கன்னத்தின் வழி
சன்னத்தில் கரையட்டும்...
காத்திருத்தல் 
தவம்....
அது காதலின் 
வரம்....


Monday, February 7, 2011

உனக்காக எதையும் நான் 
சேர்த்து வைக்கப்போவதில்லை...

உன்னில் ஆச்சர்யப்படவே 
எனக்கு
என் ஆயுள் போதாது..
நீ குளித்த நீரை உண்ட 
அந்த
அரளியின் கற்பத்தில்
மல்லிகை இருக்கிறது..

நீ தலை துவட்டியபின் 
அந்த 
துண்டிற்கு இன்று 
குளிர் காய்ச்சல் அடிக்கிறது...

உனக்கென்ன...
நீ குளித்து முடித்து போய்விட்டாய்..

அனால் அந்த ஷவர் 
நீர் கொட்டுவதை நிறுத்தவேயில்லை....

Saturday, February 5, 2011

அவள்,
தாவணித்தலைப்பெடுத்து தன்
முகத்தை மூடினாள்...
அதெப்படி...
இருவிழி மீன்களோடு
முப்பத்திரண்டு
முத்துக்களும் சிக்கியது?
தூரிகை படாத வண்ணம் நீ...
இன்னும்
தீட்டப்படாத ஓவியம்.

உளி தீண்ண்டாத பாறை நீ...
இன்னும்
செதுக்கப்படாத சிற்பம்.

மொழியப்படாத தமிழ் நீ...
இன்னும்
அச்சிலேறா கவிதை.

விதைக்கப்படாத விதை நீ...
இன்னும்
நிழல் தரா விருட்சம். 

Friday, February 4, 2011



மற்ற உலக சுகம் தூய்த்து
மிச்ச காலம் சுமந்து வா...
என் காதலின் சுகம் தூய்க்க
இந்த ஜன்மம்
முழுமையாய் தேவைப்படும்....!

இது என்றோ எடுத்த என் தீர்மானம்....
இனி கவிதைகளை
காகிதங்களில் எழுதுவதில்லை என்று...!

கனவுகளில் கொஞ்சம்
காற்றில் கொஞ்சமாய்
காதலுடன் எழுதி வைப்பேன்....
என்றேனும் ஒருநாள் 
உன் சுகமான நித்திரையில் 
உன் சுவாசப்பைகளை 
சுகமாய் நிறைக்குமென்று....


ஆனால் இன்று.....

அன்பின் இறவாமையை
இதயதிரையில் தீட்டவேண்டிய 
என் எழுதுகோல் நுனி...,
கவியெழுத தேடுகிறது
காகிதமொன்றை....!
தேவதை வேண்டி 
தேவதையிடமே 
என் தவம் ..!
உன் எல்லைகளை தாண்டி 
உள்ளே வா...
நான் உனக்கான கூண்டல்ல....
இன்னொரு வானத்தின் கதவு !